/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஆபாச படம் எடுத்து மிரட்டல் நபர் கைது
/
ஆபாச படம் எடுத்து மிரட்டல் நபர் கைது
ADDED : டிச 01, 2024 07:48 AM
திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் வசித்த இளம் பெண், வேலுார் மாவட்டம், ஆம்பூரில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். அப்போது, கடலுார் மாவட்டம், கோட்டுமுல்லை பகுதியை சேர்ந்த தினேஷ், 31, என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளார்.
பிப்., 19ல், அந்த பெண்ணை வேலுாரில் உள்ள ஒரு ேஹாட்டலுக்கு அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, ஆபாச மாக போட்டோ எடுத்துள் ளார். அந்த பெண், தினேைஷ கண்டித்ததோடு, அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.
ஆத்திரமடைந்த வாலிபர், தன்னிடம் பேச வற்புறுத்தியும், பேசாவிட்டால் ஆபாச படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவதாகவும் மிரட்டி உள்ளார். பெண்ணின் பெற்றோரை தொடர்பு கொண்டு, உங்கள் மகளை கொலை செய்து விடுவேன் என்றும், பெண்ணுக்கு ஏற்பாடு செய்த திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் நவ., 5ல், திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்த போது, தினேஷ் மலேஷியா சென்றது தெரிந்தது. நவ., 28 அதிகாலை, 12:30 மணிக்கு தினேஷ், மலேஷியாவில் இருந்து விமானத்தில், கேரள மாநிலம், கொச்சின் விமான நிலையத்தில் இறங்கிய போது, கொச்சின் விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகள் திருச்சி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தனிப்படை போலீசார் தினேஷை கைது செய்தனர்.

