/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
தந்தையின் ரூ.50 லட்சம் அள்ளி சென்ற மகள்கள்
/
தந்தையின் ரூ.50 லட்சம் அள்ளி சென்ற மகள்கள்
ADDED : ஜன 25, 2025 01:58 AM
திருச்சி:தந்தையுடன் ஏற்பட்ட சொத்து பிரச்னையில், அவரது வீட்டில் இருந்து, 50 லட்சம் ரூபாய் மற்றும் சொத்து பத்திரங்களை எடுத்துச் சென்ற இரு மகள்கள், அவர்களின் கணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி, காந்தி மார்க்கெட், தையல்கார தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம், 85. இவருக்கு கல்பனா, பிரியா என, திருமணமான இரு மகள்கள் உள்ளனர். சதாசிவத்தின் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக, குடும்பத்தில் பிரச்னை இருந்தது.
சில நாட்களாக கல்பனா தன் கணவர் பொற்செழியன், பிரியா தன் கணவர் சித்தா யோகமன்னன் ஆகியோருடன், தந்தையுடன் வீட்டில் வைத்து பேசி வந்தனர்.
இந்நிலையில், சதாசிவம் காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரில், தன் வீட்டில் வைத்திருந்த, 50 லட்சம் ரூபாய் மற்றும் சொத்து பத்திரங்களை, மகள்கள் கல்பனா, பிரியா இருவரும், தங்கள் கணவர்களின் உதவியுடன் எடுத்துச் சென்று விட்டனர். அவற்றை மீட்டுத்தர வேண்டும் என, கூறியுள்ளார்.
காந்தி மார்க்கெட் குற்றப் பிரிவு போலீசார், அந்த முதியவரின் மகள்கள் மற்றும் மருமகன்கள் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

