/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
சிறை நிரப்பும் போராட்டம் கட்டுமான தொழிலாளர் கூட்டத்தில் தீர்மானம்
/
சிறை நிரப்பும் போராட்டம் கட்டுமான தொழிலாளர் கூட்டத்தில் தீர்மானம்
சிறை நிரப்பும் போராட்டம் கட்டுமான தொழிலாளர் கூட்டத்தில் தீர்மானம்
சிறை நிரப்பும் போராட்டம் கட்டுமான தொழிலாளர் கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஆக 06, 2011 02:25 AM
திருச்சி : தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது.
கூட்டத்திற்கு சங்கத்தின் சிறப்பு தலைவர் அந்தோணிமுத்து தலைமை வகித்தார். கூட்டத்தில் நிர்வாகிகள் நடராஜன், ரணியப்பன், தேசிகன், குப்பாபாய், ராஜா, முனுசாமி, நடராஜன், மணிவேல், ராஜன், முருகையன் மற்றும் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏ.ஐ.சி.சி.டி.யு.,வும் அழைப்பு விடுத்துள்ள ஊழல் மற்றும் பெரும் தொழில் குழும கொள்ளைக்கு எதிராக வரும் 9ம் தேதி நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் திரளாக பங்கு பெற்று வெற்றி பெற செய்வது. நலவாரிய செஸ்வரியை ஒரு சதவீதமாக உடனே உயர்த்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். நலவாரிய உறுப்பினராக சேர வி.ஏ.ஓ., சான்று பெறும் முறையை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.