/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சியில் வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம் : ஸ்டிரைக்கால் வியாபாரிகள் கடும் அவதி
/
திருச்சியில் வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம் : ஸ்டிரைக்கால் வியாபாரிகள் கடும் அவதி
திருச்சியில் வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம் : ஸ்டிரைக்கால் வியாபாரிகள் கடும் அவதி
திருச்சியில் வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம் : ஸ்டிரைக்கால் வியாபாரிகள் கடும் அவதி
ADDED : ஆக 06, 2011 02:25 AM
திருச்சி: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சி உள்ளிட்ட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருச்சியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சி, அந்த வங்கிகளின் முதலீட்டுக்கு உலக வங்கியிடம் வாங்குவதை கண்டித்தும், இந்திய தனியார்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டின் உச்ச வரம்பை தாராளமாக அதிகரிக்கும் முடிவை கண்டிப்பது உள்ளிட்ட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அதன்படி திருச்சி மாநகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட வங்கிகளும், புறநகர் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வங்கிகளும் நேற்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. திருச்சியில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்.சி., பள்ளி எதிரே உள்ள ஜென்னி பிளாசா வளாகத்திலுள்ள இந்தியன் வங்கியின் மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திருச்சி மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். வங்கி ஊழியர் சங்க திருச்சி மாவட்ட செயலாளர் ராமராஜ், வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சந்தானம், வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பின் துணை பொதுச்செயலாளர் அசோகன், அமைப்பு செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். திருச்சி மாவட்டத்தில் நடந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பல கோடி ரூபாய் வங்கி வரவு-செலவு பாதிக்கப்பட்டது. வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர்.