sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருச்சி

/

திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் 689 ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு

/

திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் 689 ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு

திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் 689 ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு

திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல் 689 ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு


ADDED : செப் 09, 2011 02:13 AM

Google News

ADDED : செப் 09, 2011 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: உள்ளாட்சி தேர்தலுக்காக திருச்சி மாநகராட்சியில் 60 வார்டுகளில் 689 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன,'' என மாநகராட்சி கமிஷனர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

திருச்சி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் 689 ஓட்டுச்சாவடிகள் பட்டியலை மாநகராட்சி கமிஷனர் வீரராகவ ராவ் வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாநகராட்சியில் 2011 நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக 60 வார்டுகளிலும் 689 ஓட்டுச்சாவடிகள் பொது மக்கள் பார்வைக்காக இன்று(நேற்று) வெளியிடப்படுகிறது. இதில் ஆண், பெண்களுக்கான பொதுவான ஓட்டுச்சாவடி 581ம், ஆண்களுக்கான தனி ஓட்டுச்சாவடி 54ம், பெண்களுக்கான தனி ஓட்டுச்சாவடி 54ம் அடங்கும். ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 12 ஆண்களுக்கான ஓட்டுச்சாவடி, 12 பெண்களுக்கான ஓட்டுச்சாவடி, ஆண்கள் மற்றும் பெண்கள் ஓட்டுச்சாவடி 146 என மொத்தம் 170 ஓட்டுச்சாவடி. அரியமங்கலம் கோட்டத்தில் ஆண்களுக்கு 12 ஓட்டுச்சாவடி, பெண்களுக்கு 12 ஓட்டுச்சாவடி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொது ஓட்டுச்சாவடி 126 உட்பட 150 ஓட்டுச்சாவடி. பொன்மலை கோட்டத்தில் ஆண்களுக்காக 13 ஓட்டுச்சாவடி, பெண்களுக்காக 13 ஓட்டுச்சாவடி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொது ஓட்டுச்சாவடி 147 உட்பட 173 ஓட்டுச்சாவடி. கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில் 17 ஓட்டுச்சாவடி ஆண்களுக்கும், 17 ஓட்டுச்சாவடி பெண்களுக்கும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொதுவான ஓட்டுச்சாவடி 162 உட்பட 196 ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகளிலும் ஐந்து லட்சத்து 40 ஆயிரத்து 399 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் இரண்டு லட்சத்து 68 ஆயிரத்து 39 ஆண் வாக்காளர்களும், இரண்டு லட்சத்து 72 ஆயிரத்து 325 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் இட ஒதுக்கீடு விபரங்கள் 2001 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மாநில தேர்தல் கமிஷன் ஒப்புதல் படி விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us