/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
நேபாளம் விமான விபத்தில் 8 பேர் பலி தி.மு.க., மவுன அஞ்சலி; காங்., இரங்கல்
/
நேபாளம் விமான விபத்தில் 8 பேர் பலி தி.மு.க., மவுன அஞ்சலி; காங்., இரங்கல்
நேபாளம் விமான விபத்தில் 8 பேர் பலி தி.மு.க., மவுன அஞ்சலி; காங்., இரங்கல்
நேபாளம் விமான விபத்தில் 8 பேர் பலி தி.மு.க., மவுன அஞ்சலி; காங்., இரங்கல்
ADDED : செப் 27, 2011 11:47 PM
திருச்சி: விமான விபத்தில் இறந்த திருச்சியை சேர்ந்த 8 கட்டிட கலை
தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தி.மு.க., சார்பில் மவுன அஞ்சலி
செலுத்தப்பட்டது.
காங்கிரஸ் கட்சி அனுதாபங்களை தெரிவித்துள்ளது. திருச்சி
மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி, கலைஞர் அறிவாலயத்தில்
நேற்று நடந்தது. மாநகர அவைத்தலைவர் வண்ணை அரங்கநாதன் தலைமை வகித்தார்.
ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் அமைச்சர்கள்
செல்வராஜ், அழகுதிருநாவுக்கரசு, எம்.பி.,க்கள் விஜயன், செல்வகணபதி உள்பட
பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிதுவங்கும் முன், நேபாளம் விமான விபத்தில்
பலியான திருச்சியை சேர்ந்த 8 இன்ஜினியர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி
செலுத்தப்பட்டது. * காங்கிரஸ் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜெரோம்
ஆரோக்கியராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகரை
நவீன கட்டிட யுக்திகளுடன் எண்ணற்ற கட்டிடங்களை கட்டி, மாநகரை
அழகுப்படுத்தி, அடுக்குமாடி கட்டிடங்களை நிறுவிய மாபெறும் கட்டி கலை
தொழில்நுட்ப அதிபர்கள் திருச்சியை சேர்ந்த 8 பேர் நேபாளம் விமான விபத்தில்
பலியாகினர். இது இந்தியாவுக்கும், திருச்சி மாநகரக்கும் ஈடு செய்ய முடியாத
இழப்பாகும். அவர்கள் பிரிவால் வாடும் அனைத்து குடும்பங்களுக்கும்,
உறவினர்களுக்கும் திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த
அனுதாபம், வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது. * ஏ.ஐ.டி.யு.சி., கட்டிட தொழிலாளர் சங்கம் மாநில நிர்வாகி
சுரேஷ், நேபாளம் விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துள்ளார்.