/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பாதுகாப்புப் பணி பார்வையாளர் வருகை
/
பாதுகாப்புப் பணி பார்வையாளர் வருகை
ADDED : அக் 01, 2011 12:24 AM
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 13ம் தேதி நடக்கிறது.
இதற்காக தேர்தல் கமிஷனால் செலவின பார்வையாளர், பொது பார்வையாளர், பாதுகாப்பு பணி பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், செலவின பார்வையாளரான நிவேதிகா பிஸ்வாஸ் கடந்த 10 நாளுக்கு முன் திருச்சி வந்து பணியில் ஈடுபட்டு வருகிறார் பொது தேர்தல் பார்வையாளரான ஆர்.கே.பதக் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி வந்து பணியை துவக்கினார். பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி பராசிவமூர்த்தி நேற்று முன்தினம் திருச்சி வந்து பணிகளை துவக்கினார். பாதுகாப்பு பணி பார்வையாளர் பராசிவமூர்த்தி அரசினர் சுற்றுலா மாளிகையில் உள்ள ஏ-2 அறையில் தங்கியுள்ளார். அவரை தினசரி காலை 10 மணி முதல் 11 மணி வரை பொதுமக்கள், அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து புகார்களை தெரிவிக்கலாம். அவரது அறையில் உள்ள ஃபோன் எண் 0431-2462334க்கும், 94887-60656 என்ற மொபைல் எண்ணுக்கும் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.