/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பெண்ணுக்கு தி.மு.க., கவுன்சிலர் கொலை மிரட்டல்: வீடியோவில் அராஜகம்
/
பெண்ணுக்கு தி.மு.க., கவுன்சிலர் கொலை மிரட்டல்: வீடியோவில் அராஜகம்
பெண்ணுக்கு தி.மு.க., கவுன்சிலர் கொலை மிரட்டல்: வீடியோவில் அராஜகம்
பெண்ணுக்கு தி.மு.க., கவுன்சிலர் கொலை மிரட்டல்: வீடியோவில் அராஜகம்
ADDED : ஏப் 22, 2025 07:17 AM
திருச்சி : திருச்சி மாநகராட்சி, 57வது வார்டு கவுன்சிலர், தி.மு.க.,வைச் சேர்ந்த முத்துச்செல்வம். அமைச்சர் நேருவின் பெயரைச் சொல்லியே மிரட்டல் போக்கோடு வலம் வரும் இவர், தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவா வீடு தாக்கப்பட்ட வழக்கில் சிக்கியவர்.
ஏற்கனவே, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை விமர்சித்த புகாரிலும் சிக்கிய முத்துச்செல்வம், மத்திய மாவட்ட துணை செயலராகவும் உள்ளார்.
இந்நிலையில், அவர் கவுன்சிலராக உள்ள எடமலைப்பட்டி புதுாரில் உள்ள ஒரு வீட்டில், கேட்டை உடைக்க முயற்சித்து, அந்த வீட்டு பெண்ணை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும், அந்த வீடியோவில் கதவை உடைக்க முயலும் கவுன்சிலர் முத்துச்செல்வம் மீது, பெண் கற்களை வீசுகிறார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
எடமலைப்பட்டி புதுார் பகுதியில் கிருத்திகாராணி என்ற பெண்ணின் குடும்பத்துக்கு சொந்தமான, 9 சென்ட் இடத்தை, பொதுப்பாதையாக்கும் முயற்சியாகவும், அங்குள்ள அபார்ட்மென்டுக்கு வழிகொடுக்கும் முயற்சியாகவும், கவுன்சிலர் அடாவடியாக செயல்பட்டு வருகிறார்.
ஆளுங்கட்சி மற்றும் அமைச்சர் நேருவிடம் தனக்குள்ள செல்வாக்கால், அந்த குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்து விடுவேன் என மிரட்டுவது, பெண்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவது என்று அடாவடி செய்கிறார்.
போலீசில் புகார் அளித்தாலும், அவர்கள் கண்டுகொள்வதில்லை.
இவரால் கட்சிக்கு தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இவ்விஷயத்தில் அமைச்சர் நேரு தலையிட்டு முடிக்கவில்லை என்றால், விபரீதங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.