/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
போலீஸ் ஸ்டேஷனுக்கு பூட்டு விவசாய சங்கத்தினர் கைது
/
போலீஸ் ஸ்டேஷனுக்கு பூட்டு விவசாய சங்கத்தினர் கைது
ADDED : நவ 09, 2024 10:48 PM
திருச்சி:திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுதும் விவசாயிகள் வங்கிகளில் கடன் பெற்று டிராக்டர் உள்ளிட்ட வேளாண் இயந்திரங்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு சில மாத தவணைகள் செலுத்த முடியாத போது, வங்கி நிர்வாகத்தினர், டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்களை எடுத்துச் சென்று விடுகின்றனர்.
இதுகுறித்து, விவசாயிகள் போலீசில் புகார் செய்தால், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை கூறியும், வேளாண் இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வங்கி நிர்வாகத்தினரை கண்டித்தும், போலீஸ் ஸ்டேஷனுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப் போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் அறிவித்தனர்.
நேற்று, திருச்சி மாவட்டம், துறையூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு விவசாய சங்கத்தினர் பூட்டு போட போவதாக தகவல் வெளியானது.
துறையூர் ரவுண்டானா பகுதியில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திரண்ட, 25க்கும் மேற்பட்ட விவசாயிகளை துறையூர் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.