/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
அழுகிய பயிருடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
அழுகிய பயிருடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 18, 2024 02:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:தொடர்மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இவற்றுக்கு ஏக்கருக்கு, 40,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகளின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நேற்று காலை, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர், திருச்சி கலெக்டர் அலுவலகம் முன், அழுகிய நெற்பயிர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தங்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின், கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர்.