/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பைக் ஓட்டிய சிறுவனின் தந்தை கைது
/
பைக் ஓட்டிய சிறுவனின் தந்தை கைது
ADDED : ஜூன் 20, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சியில், 16 வயது சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தை மீது போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
திருச்சி, காந்தி மார்க்கெட் போலீசார், மார்க்கெட் வளைவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக, லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டி வந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர்.
அவன், தாராநல்லுாரை சேர்ந்த சந்திர சேகரின் 16 வயது மகன் என்பது தெரிய வந்தது. பைக்கை பறிமுதல் செய்த போலீசார், லைசென்ஸ் இல்லாமல் சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த சந்திரசேகர் மீது வழக்கு பதிந்து கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.