கனரா வங்கியில் தீ விபத்து பல கோடி நகை, பணம் தப்பின
கனரா வங்கியில் தீ விபத்து பல கோடி நகை, பணம் தப்பின
ADDED : பிப் 18, 2025 06:31 AM
அ நிறம் | அளவு
திருச்சி : திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே திருப்பைஞ்ஞீலி கனரா வங்கி கிளையில் நேற்று முன்தினம் புகைமூட்டம் வந்துள்ளது. இதைப் பார்த்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சமயபுரம், மண்ணச்சநல்லுார் தீயணைப்புத் துறையினர் போலீசாருடன் சென்று, வங்கி கதவை திறந்தனர். அப்போது, வங்கி முழுதும் தீ கொளுந்துவிட்டு எரிந்துள்ளது.
ஒரு மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில், வங்கியில் இருந்த கம்ப்யூட்டர்கள், பணம் எண்ணும் இயந்திரம், 'சிசிடிவி' கேமரா, நகை எடை போடும் இயந்திரம் போன்ற பொருட்கள் எரிந்தன.
பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் மற்றொரு அறையில் இருந்ததால் தப்பின. மண்ணச்சநல்லுார் போலீசார் மற்றும் தடய அறியியல் துறையினர் விசாரிக்கின்றனர்.
