தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மரப்பட்டறையில் தீ விபத்து

மரப்பட்டறையில் தீ விபத்து

மரப்பட்டறையில் தீ விபத்து


UPDATED : அக் 13, 2026 10:06 PM

ADDED : அக் 13, 2026 09:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 10:06 PM ADDED : அக் 13, 2026 09:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: திருவெறும்பூர் அருகே, தே.மு.தி.க., மாநகர் மாவட்ட செயலரின் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், மரக் கதவுகள் எரிந்து சாம்பலானது.

திருச்சி, தென்னுார் பகுதியை சேர்ந்த கணேசன், 56; தே.மு.தி.க., திருச்சி மாநகர் மாவட்ட செயலரான அவர், திருவெறும்பூர் அருகே, காட்டூர் பாப்பா குறிச்சி பகுதியில், தேக்கு மரக் கதவுகள் தயாரித்து, விற்பனை செய்து வருகிறார். நேற்று மாலை, மரப்பட்டறை அலுவலக அறையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

பின்னர், மளமளவென மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியதால், அங்கு வேலை பார்த்த ஊழியர்கள், திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், கடையில் தயார் செய்து விற்பனைக்கு வைத்திருந்த, பல லட்சம் ரூபாய் மதிப்பள்ள தேக்கு மரக்கதவுகள் எரிந்து சாம்பலாகின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us