/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
சத்துணவு முட்டையில் ஆம்லெட்: 3 பெண்கள் உட்பட நால்வர் கைது
/
சத்துணவு முட்டையில் ஆம்லெட்: 3 பெண்கள் உட்பட நால்வர் கைது
சத்துணவு முட்டையில் ஆம்லெட்: 3 பெண்கள் உட்பட நால்வர் கைது
சத்துணவு முட்டையில் ஆம்லெட்: 3 பெண்கள் உட்பட நால்வர் கைது
UPDATED : செப் 23, 2024 06:55 AM
ADDED : செப் 23, 2024 02:25 AM

எடமலைப்பட்டி: திருச்சி மாவட்டம் துறையூரில், ஒரு ஹோட்டலில் வாங்கி வைக்கப்பட்டிருந்த சத்துணவு முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஹோட்டல் உரிமையாளர், சத்துணவு அமைப்பாளர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், திருச்சி மாநகர், எடமலைப்பட்டி புதுாரில் சத்துணவு முட்டைகள் விற்கப்படுவதாக, உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
சோதனையில், எ.புதுாரில் சத்துணவு முட்டைகள் பயன்படுத்திய ஒரு ஹோட்டலில், 200க்கும் மேற்பட்ட முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை நடத்திய ஜனத்துல் குப்ரா, 60, சல்மா, 67, ஆகிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டு, ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.
அவர்களுக்கு முட்டை சப்ளை செய்த ரகுராமன், 43, அவரது மனைவி சத்யா, 42, ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்யும் ஏஜென்சியில், ரகுராமன் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.