/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பெட்ரோல் குண்டு வீச்சு நான்கு மாணவர்கள் கைது
/
பெட்ரோல் குண்டு வீச்சு நான்கு மாணவர்கள் கைது
ADDED : பிப் 16, 2024 01:58 AM
துறையூர்:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கண்ணனுாரில் இமயம் கலை அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு கடந்த 14ம் தேதி, வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
அதில் நடந்த ஒத்திகையின் போது, அதே கல்லுாரியில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் பவித்ரன், 21, என்ற மாணவர், பலவிதமான இடையூறுகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவரை, வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முகிலன் என்பவர் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பவித்ரன், இரவு, 7.30 மணிக்கு தன் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து, இரு பைக்குகளில் வந்து, பெட்ரோல் குண்டுகளை கல்லுாரி கேட் மீதும், உள்ளேயும் வீசினார். இதில் யாரும் காயமடையவில்லை. எனினும், கல்லுாரி வாயில் சேதமடைந்தது.
இதுகுறித்து கல்லுாரி நிர்வாகம் சார்பில் ஜம்புநாதபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்லுாரி மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய மாணவர் பவித்ரன், அதே கல்லுாரியில் பயிலும் அவரது நண்பர்கள் நால்வரை நேற்று கைது செய்தனர்.