/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
கானா பாடகி நிகழ்ச்சி திருச்சியில் ரத்து
/
கானா பாடகி நிகழ்ச்சி திருச்சியில் ரத்து
ADDED : ஜன 15, 2025 08:49 AM
திருச்சி; திருச்சி மாநகரம், 57வது வட்ட தி.மு.க., சார்பில் நேற்று பொங்கல் விழாவை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், சென்னையை சேர்ந்த கானா பாடகி இசைவாணி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுவாமி அய்யப்பன் குறித்து சர்ச்சையான பாடல்கள் பாடிய இசைவாணியின் நிகழ்ச்சி, ஹிந்து அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் நிகழ்ச்சியை ரத்து செய்ய வலியுறுத்தி, போலீசில் புகார் அளித்திருந்தன. இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன், போலீசார் பேச்சு நடத்தினர். முடிவில், இசைவாணியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.