/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஸ்ரீரங்கம் கோவிலின் பரிசுப்பொருட்கள் ராமர் கோவிலுக்கு அளித்த பிரதமர்

ADDED : ஜன 24, 2024 11:16 PM

அயோத்தி:தமிழகத்தின் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் சார்பில் அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை, பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
சமீபத்தில், தமிழகத்தின் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில், பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்தார். அப்போது, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அக்கோவிலுக்கு இரண்டு பட்டு வேஷ்டிகள் மற்றும் மூன்று பட்டு புடவைகளுடன் பழங்களும் பரிசளிக்கும்படி கோவில் நிர்வாகம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியிடம் தரப்பட்டது. இப்பரிசுப் பொருட்களை, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்ற போது அக்கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலைச் சேர்ந்த சுந்தர் பட்டர் கூறுகையில், ''ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி, பகவான் ராமரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த உறவைக் குறிக்கும் வகையில் இந்த பரிசுகள் வழங்கப்பட்டன,'' என்றார்.