/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ரூ.10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்
/
ரூ.10 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்
ADDED : ஜூன் 04, 2025 01:39 AM
திருச்சி:பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சாவை, திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று காலை, திருச்சிக்கு ஸ்கூட் விமானத்தில் வந்த பயணியரை, திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அதில், சந்தேகத்துக்கு இடமாக வந்தவரை பிடித்து, அவரது உடைமைகளை சோதனையிட்டதில், அவர், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர் பீஹாரை சேர்ந்த கமலேஷ்குமார், 35, என தெரியவந்தது.
அதேபோல், நேற்று காலை மலேஷியாவில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில், திருச்சி வந்த சிவகங்கையை சேர்ந்த மகதிர் என்பவர், தன் உடைமைகளுக்குள், இரு அரியவகை உடும்புகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஸ்டம்ஸ் அதிகாரிகள் மகதிரிடம் விசாரிக்கின்றனர்.