/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பஸ் டிரைவர் கொலை கணவன், மனைவி கைது
/
பஸ் டிரைவர் கொலை கணவன், மனைவி கைது
ADDED : செப் 26, 2025 10:46 PM

திருவெறும்பூர்:தனியார் பஸ் டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலி, அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார், 50; தனியார் பஸ் டிரைவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வீரமுத்து, 52, மனைவி லட்சுமி, 46, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, லட்சுமியை, ரமேஷ்குமார் நடுரோட்டில் கன்னத்தில் அறைந்துள்ளார். இது, வீரமுத்துவுக்கு தெரியவர, அவர் ரமேஷ்குமாரை தட்டி கேட்டதில் தகராறு ஏற்பட்டது. பின், அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.
இந்நிலையில், ரமேஷ்குமார் தன் உறவினர் ரோகித் என்பவரின் மொபைல் போனை வாங்கிக் கொண்டு, அப்பகுதி ரயில்வே டிராக்கில் சென்றவர், நீண்ட நேரமாகியும் வரவில்லை. ரோகித் தேடிச் சென்றபோது, வீரமுத்து வீட்டின் எதிரே உள்ள ரயில்வே டிராக்கில், ரமேஷ்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
திருவெறும்பூர் போலீசார் விசாரித்ததில், ரமேஷ்குமாரை கொலை செய்ததாக வீரமுத்து, லட்சுமியை போலீசார் கைது செய்தனர்.