/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மனைவியை கிணற்றில் தள்ளி கொலை செய்த கணவன் கைது
/
மனைவியை கிணற்றில் தள்ளி கொலை செய்த கணவன் கைது
ADDED : ஏப் 27, 2025 02:59 AM
திருச்சி: திருச்சி அருகே, நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியை -கிணற்றில் தள்ளி கொலை செய்த- கணவனை, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 43. இவரது மனைவி சத்தியபிரியா, 33; மூன்று மகன்கள் உள்ளனர்.
சத்தியபிரியா நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மதியம், சத்தியபிரியா தோட்டத்து கிணறு அருகில் நின்று மொபைல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, 'யாருடன் பேசுகிறாய்?' என்று கேட்டு, சத்தியபிரியாவுடன், சக்திவேல் தகராறு செய்தார். தொடர்ந்து, சத்தியபிரியா கையில் இருந்த போனை, சக்திவேல் பறிக்க முயன்றதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், சத்தியபிரியாவை 85 அடி ஆழ கிணற்றுக்குள் சக்திவேல் தள்ளி விட்டார். தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த சத்தியபிரியா, தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் சக்திவேலை கைது செய்தனர்.

