/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
'போட்டு வாங்கிய' இன்ஸ்பெக்டர்: வாங்கி கட்டிக்கொண்ட மாணவர்கள்
/
'போட்டு வாங்கிய' இன்ஸ்பெக்டர்: வாங்கி கட்டிக்கொண்ட மாணவர்கள்
'போட்டு வாங்கிய' இன்ஸ்பெக்டர்: வாங்கி கட்டிக்கொண்ட மாணவர்கள்
'போட்டு வாங்கிய' இன்ஸ்பெக்டர்: வாங்கி கட்டிக்கொண்ட மாணவர்கள்
ADDED : ஆக 13, 2025 01:55 AM
திருச்சி; திருச்சியில் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே, சாலை விதிமுறைகளை விளக்கும் குறியீடுகள், வடிவங்களுடன் போக்குவரத்து பூங்கா அமைக்கப் பட்டுள்ளது.
இங்கு, பள்ளி மாணவ, மாணவியரை வரவழைத்து, சாலை போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மாநகர போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள் பங்கேற்று, போக்குவரத்து விதிமுறைகள், அதை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கம் அளிக்கின்றனர்.
மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியை துவங்கி வைத்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, பொதுவான அறிவுரைகளை வழங்கிச் சென்றார்.
அதன் பின், பள்ளி மாணவ, மாணவியரை திறந்தவெளி அரங்கில் அமர வைத்து, போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விளக்கிய இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், 'இங்குள்ளவர்களில் எத்தனை பேருக்கு டூ - வீலர் ஓட்டத்தெரியும்' என்றார்.
உடனே, அரங்கில் இருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரில் பலர் ஆர்வமாக கையை துாக்கினர். சிரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர், 'அது தவறு தெரியுமா...' என்றதும், ஆர்வ மிகுதியால் கை துாக்கிய பலரும் தலையை குனிந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய அவர், 'உங்களில் பெரும்பாலானோர் பெற்றோருக்கு தெரிந்தும், தெரியாமலும், டூ - வீலர் ஓட்டுகின்றனர். நீங்கள் டூ - வீலர் ஓட்டிச் செல்லும் போது, அசம்பாவிதம் ஏற்பட்டால், இன்சூரன்ஸ் போன்ற எதையும் பெற முடியாது.
'மேலும், பெற்றோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படும். எனவே, 18 வயது பூர்த்தியடையாதவர்கள் டூ - வீலர் ஓட்டுவது தவறு. பள்ளிப் படிப்பு முடிந்து 18 வயதானவுடன் முறைப்படி பயிற்சி பெற்று, டிரைவிங் லைசென்ஸ் எடுத்துத் தான் டூ - வீலர் ஓட்ட வேண்டும்' என்றார்.