ADDED : டிச 14, 2024 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பச்சமலையில், சோபானபுரத்தில் இருந்து டாப் செங்காட்டுப்பட்டி செல்லும் மலைப்பாதையில், ஏழாவது வளைவில், மண் சரிவு ஏற்பட்டு, பாதையை மறைத்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், கனரக இயந்திரத்தால் சரிந்து விழுந்த மண்ணையும், கற்களையும் அகற்றி, பாதையை சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.