சுமைப்பணி தொழிலாளர்கள் 'ஸ்டிரைக்' 100 லாரிகள் சரக்குகளுடன் தேக்கம்
சுமைப்பணி தொழிலாளர்கள் 'ஸ்டிரைக்' 100 லாரிகள் சரக்குகளுடன் தேக்கம்
ADDED : ஆக 20, 2026 03:58 AM

திருச்சி: திருச்சி மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக சுமைப்பணி தொழிலாளர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால், நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் சரக்குகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
தமிழகம் முழுதும் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்கள், கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பன உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக., 18 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால், நேற்று, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், வட மாநில தொழிலாளர்களை, தற்காலிக பணியில் ஈடுபடுத்த முயன்றதாக தகவல் பரவியது.
இதையடுத்து, திருச்சி, கே.கே.நகரில் உள்ள கிடங்கில், திரண்ட சுமைப்பணி தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.
சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தி ல் ஈடுபட்டிருப்பதால், திருச்சியில் உள்ள கிடங்கில், நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் சரக்குகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள், சத்துணவு கூடங்களுக்கு உணவு பொருட்கள் கொண்டு செல்வதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிவகங்கை நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் உள்ள, 9 கிடங்குகளில் உள்ள சுமை துாக்கும் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடு பட்டுள்ளனர்
மயிலாடுதுறையில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் பணியாற்றி வரும் சுமை துாக்கும் தொழிலாளர்கள், நேற்று முன்தினம் முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
வேலுாரில், நுகர்பொருள் வாணிப கிடங்கில், வட மாநில கூலி ஆட்களை வேலை செய்ய அழைத்து வந்ததால், சுமை துாக்கு ம் தொழிலாளர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
