/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
நம்புகுறிச்சி சொக்கநாதர் மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம்
/
நம்புகுறிச்சி சொக்கநாதர் மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம்
நம்புகுறிச்சி சொக்கநாதர் மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம்
நம்புகுறிச்சி சொக்கநாதர் மீனாட்சி கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 08, 2025 05:07 AM

திருச்சி: நம்புகுறிச்சி கிராமத்தில் உள்ள சொக்கநாதர் - மீனாட்சி கோவிலில், 50 ஆண்டுகளுக்கு பின் மஹா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நம்புகுறிச்சி கிராமத்தில் உள்ள சொக்கநாதர் - மீனாட்சி கோவில், நாயக்கர் காலத்தில், 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த கோவில், 50 ஆண்டுகளுக்கு மேல் பராமரிப்பின்றி பாழடைந்து கிடந்தது.
நம்புகுறிச்சி சின்னசாமியின் மூத்த மகன் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர் பிரசன்னத்துடன், அவரது குடும்பத்தினர் ஜெயகுமார், மோகன்தாஸ் மற்றும் கிராம மக்களால் கோவிலில் புனரமைப்பு செய்து, கும்பாபிேஷகம் செய்யப்பட்டது.
கடந்த 5ம் தேதி காலை 8:00 மணிக்கு கணபதி, நவகிரக ஹோமங்களுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. நேற்று காலை 6:00 மணிக்கு கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் நடைபெற்று, காலை 9:00 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது.
காலை 9:45 மணிக்கு விநாயகர், சொக்கநாதர், மீனாட்சி விமான கோபுரம் மஹா கும்பாபிஷேகம் மற்றும் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை, தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், சூரியன், பைரவர், பரிவார மூர்த்திகள் சன்னிதி கோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றன.
அறநிலைய துறை இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில், ஊட்டத்துார் சுத்தரத்தினேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் நடராஜன், ஞான பூபதி, கார்த்திகேயன், சந்தோஷ் ஆகியோர் கும்பாபிஷேகம் செய்தனர்.