/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மாடியிலிருந்து விழுந்த பெயின்டர் சாவு
/
மாடியிலிருந்து விழுந்த பெயின்டர் சாவு
ADDED : ஜூன் 07, 2025 02:39 AM
திருச்சி:பள்ளிக்கு பெயின்ட் அடிக்கும் போது, மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்த பெயின்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி விமான நிலையம் பகுதியில் எஸ்.பி.ஐ.ஓ.ஏ., மெட்ரிக்., பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளி கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில், கடலுார் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தத்தைச் சேர்ந்த முருகேசன், 33, ஈடுபட்டு வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் மொட்டை மாடியில் நின்று, கட்டடத்துக்கு பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த முருகேசன் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை, பள்ளி வாகனத்தில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரை, விமான நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.