/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
'ரெங்கா, ரெங்கா' கோஷத்துடன் ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்
/
'ரெங்கா, ரெங்கா' கோஷத்துடன் ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்
'ரெங்கா, ரெங்கா' கோஷத்துடன் ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்
'ரெங்கா, ரெங்கா' கோஷத்துடன் ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்
ADDED : ஏப் 13, 2025 03:24 AM

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், நேற்று, பங்குனி தேரோட்டம் நடந்தது. 'ரெங்கா, ரெங்கா' என்ற பக்தி கோஷமிட்டவாறு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து, தேர் இழுத்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேரோட்டம் நடைபெறும். 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி தேர்த்திருவிழாவின் போது, தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம், நேற்று நடைபெற்றது. முன்னதாக நம்பெருமாள் ரத்தின அபயஹஸ்தம், முத்துபாண்டியன் கொண்டையுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி கோரதம் வந்தடைந்தார்.
அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் எழுந்தருளியதும் காலை 7:30 மணிக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'ரெங்கா, ரெங்கா' என பக்தி கோஷமிட்டவாறு வடம் பிடித்து, தேர் இழுத்தனர். சித்திரை வீதிகளில் வலம் வந்த தேர், நிலையை அடைந்தது.