ADDED : ஆக 21, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து, நேற்று மாலை, 6:45 மணிக்கு, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், 127 பயணியருடன், சிங் கப்பூர் புறப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து, வானில் பறந்த சில விநாடிகளில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால், திருச்சியில் தரை இறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
வி மானிகள், இரண்டு ம ணி நேரத்துக்கும் மேலாக வானில் வட்டமடித்த பின், இரவு , 9:00 மணிக்கு விமானத்தை திருச்சி விமா ன நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கினர். எரிபொருள் குறைந்த பின் விமானம் தரையிறங்கிய தாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
