/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு 3 பேர் மீது 'போக்சோ'வில் வழக்கு
/
மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு 3 பேர் மீது 'போக்சோ'வில் வழக்கு
மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு 3 பேர் மீது 'போக்சோ'வில் வழக்கு
மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு 3 பேர் மீது 'போக்சோ'வில் வழக்கு
ADDED : பிப் 04, 2025 08:31 PM
திருச்சி:ல்குடி அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்த வாலிபர் உட்பட மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் விஜய், 23, பெட்டிக்கடை நடத்துகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியுடன் நெருங்கிப் பழகினார்.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். மகள் உடலில் மாற்றங்களைக் கண்ட மாணவியின் தாய், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பரிசோதனை செய்த டாக்டர், சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதைக் கண்டுபிடித்தார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், விஜய் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டார். வாலிபரின் சித்தி மற்றும் அவரது கணவர் அளித்த பணத்தில், அந்தச் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகார்படி, விஜய், அவரது சித்தி மற்றும் மாணவியின் தாய் ஆகியோர் மீது லால்குடி மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, தலைமறைவான மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.