ADDED : டிச 18, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி:சென்னை, புழல் சிறையில் கஞ்சா வழக்கில் அடைக்கப்பட்டுள்ள முகமது பாசித் என்ற கைதியை, புதுக்கோட்டை போதை பொருட்கள் குற்றம் தொடர்பான நீதிமன்றத்துக்கு, சென்னை பரங்கிமலை ஆயுதப்படையைச் சேர்ந்த நான்கு போலீசார் அழைத்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, திருச்சி மத்திய சிறையில் அடைத்து விட்டு, நேற்று காலை, அவரை புதுக்கோட்டை அழைத்துச் செல்ல, திருச்சி சிறையில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். சிறை வளாகத்தில் ஆயுதப்படை போலீசார் கைதியை அழைத்து வந்தனர்.
அப்போது, முகமது தவ்பிக் என்ற போலீஸ்காரரின் கையில் இருந்த துப்பாக்கி தவறி கீழே விழுந்து, வானத்தை நோக்கி குண்டு வெடித்தது. சிறை வளாகத்தில் திடீரென துப்பாக்கி வெடித்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.