தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ சிலையை மாற்றி குடமுழுக்கு அர்ச்சகரிடம் போலீஸ் விசாரணை

 சிலையை மாற்றி குடமுழுக்கு அர்ச்சகரிடம் போலீஸ் விசாரணை

 சிலையை மாற்றி குடமுழுக்கு அர்ச்சகரிடம் போலீஸ் விசாரணை


ADDED : ஜன 23, 2026 03:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 03:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: தோகைமலையில் உள்ள கோவிலில், முருகன் சிலையை மாற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வழக்கில், திருச்சி சிலை கடத்தல் பிரிவு போலீசார், அர்ச்சகரிடம் விசாரணை நடத்தினர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த தோகைமலையில், மலை மீது பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், கோவில் டிரஸ்டி வீரப்பன் கண்காணிப்பில் இருந்து வருகிறது.

இக்கோவிலில் அர்ச்சகராக கிருஷ்ணமூர்த்தி உள்ளார். அவர், கோவில் கருவறையில் இருந்த, பழைய பால தண்டாயுதபாணி சிலையை அகற்றி விட்டு, புதியதாக சிலை வைத்து, கும்பாபிஷேகம் செய்த தகவல், பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நேற்று மதியம், 1:30 மணிக்கு, திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இருவர், கோவில் அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தியை கோவிலுக்கு அழைத்துச் சென்று, பழைய சிலை மாற்றி அமைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்தும், உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தினர்.

ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், ''அனுமதியில்லாமல் முருகன் சிலை அகற்றப்பட்டு, புதிய சிலை அமைத்தது குறித்து அர்ச்சகர் கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை மேற்கொள்ளப்படும். உயர் அதிகாரிகள் உத்தரவின்படி, எந்த இடத்தில் விசாரணை மேற்கொள்வது என்பது குறித்து, பின் தெரிவிக்கப்படும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us