/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
சிமென்ட் ஆலையில் 'ரெய்டு' நிறைவு
/
சிமென்ட் ஆலையில் 'ரெய்டு' நிறைவு
ADDED : டிச 12, 2025 04:25 AM
திருச்சி: திருச்சி அருகே சிமென்ட் ஆலையில் நடந்த வருமான வரி சோதனையில், முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது .
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள கரியமாணிக்கம் கிராமத்தில், 'மாருதி சிமென்ட்' நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளர் காரைக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன். இந்நிறுவனம், விற்பனையை குறைத்து காட்டி, வருமான வரித்துறையை ஏமாற்றியது தெரியவந்தது.
நேற்று முன்தினம் மதியம், திருச்சி, மதுரை, திருப்பூர், கோவை ஆகிய ஊர்களில் இருந்து, 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஜி.எஸ்.டி., பிரிவு அதிகாரிகள் சோதனைக்கு வந்தனர்.
நேற்று முன்தினம் துவங்கிய சோதனை, நேற்று மதியம் வரை தொடர்ந்தது. சோதனையில், வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

