/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஸ்ரீரங்கம் கோயிலில் தூய்மைப்பணி செய்த கவர்னர்: வீடியோ வைரல்
/
ஸ்ரீரங்கம் கோயிலில் தூய்மைப்பணி செய்த கவர்னர்: வீடியோ வைரல்
ஸ்ரீரங்கம் கோயிலில் தூய்மைப்பணி செய்த கவர்னர்: வீடியோ வைரல்
ஸ்ரீரங்கம் கோயிலில் தூய்மைப்பணி செய்த கவர்னர்: வீடியோ வைரல்
UPDATED : ஜன 17, 2024 03:23 PM
ADDED : ஜன 17, 2024 10:32 AM
திருச்சி: ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் ராம நாமம் ஒலிக்கிறது என கவர்னர் ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருச்சி வந்த கவர்னர் ரவி, ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் இணை கமிஷனர் மாரியப்பன், கோயில் பட்டர் சுந்தர் உள்ளிட்டோர் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
இதன் பிறகு கவர்னர் ரவி கூறுகையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, கோயில்கள், நம் வாழ்வின் மையமாக இருந்து வருகிறது. ஒரு கிராமம் தோன்றுவதற்கு முன், முதலில் கோயில் கட்டப்படும். நீண்ட காலமாக இருந்த அடிமைப்படுத்தல் மற்றும் காலனித்துவ உணர்வு பலவீனமாகி விட்டது.
நாடு முழுவதும் மீண்டும் ராமமயம் ஆகி வருகிறது.. அயோத்தியில், ஸ்ரீராமரின் பிரமாண்டமான ஆலயம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதை நாடு முழுவதும் கொண்டாடுகிறது. ஏனென்றால், ராமர் இந்தியாவின் இதயத்தில் வாழ்கிறார். ஒவ்வொரு இந்தியரின் இதயங்களில் ராமநாமம் ஒலிக்கிறது.
கோயிலை சுத்தமாக வைத்திருப்பது சுற்றுப்புற மக்களின் பக்தர்களின் பொறுப்பு. பிரார்த்தனையின் வாயிலாக மக்களிடம் அமைதியைத் தேடுகிறோம். இன்று ரங்கநாத சுவாமி கோயிலில் அனைவரின் நலனுக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்தோம். கோயிலை சுத்தம் செய்வதில் பங்கேற்பதை, நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக கருதுகிறோம். இது நமது வழக்கமான முயற்சியாகவும், ஒவ்வொரு பக்தனின் செயலாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இவ்வாறு ரவி கூறினார்.

தூய்மைப்பணி செய்த கவர்னர்
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலுக்கு சென்ற கவர்னர் ரவி, தூய்மைப்பணி மேற்கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மதுரையில் கவர்னர்
முன்னதாக நேற்று இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

