/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பா.ஜ., பெண் பிரமுகர் வீட்டில் அடைத்து வைத்தவர் மீட்பு
/
பா.ஜ., பெண் பிரமுகர் வீட்டில் அடைத்து வைத்தவர் மீட்பு
பா.ஜ., பெண் பிரமுகர் வீட்டில் அடைத்து வைத்தவர் மீட்பு
பா.ஜ., பெண் பிரமுகர் வீட்டில் அடைத்து வைத்தவர் மீட்பு
ADDED : பிப் 15, 2024 02:50 AM
திருச்சி:திருச்சி, அரியமங்கலம், விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் மதியழகன், 55. சினிமா துணை நடிகரான அவரது மனைவி மாலதி, 46. அவர், ஏ.பி., நகரை சேர்ந்த பா.ஜ., பிரமுகரான உமாராணி, 55, என்பவரிடம், 6 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பித் தராததால், உமாராணி வீட்டில், மாலதியை இரண்டு மாதமாக தனியறையில் அடைத்து வைத்து, கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மதியழகன் மற்றும் உறவினர்கள், காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உமாராணியின் வீட்டிற்கு சென்ற போலீசார், அங்கு தனியறையில் அடைக்கப்பட்டிருந்த மாலதியை மீட்டனர்.
தொடர்ந்து உமாராணியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, 'மாலதி பலரிடம் கடன் வாங்கி உள்ளார். கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்ததால், அவரை காப்பாற்றவே என் வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்திருந்தேன்' என்றார்.
போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

