/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
நிதி நிறுவன அதிகாரி வீட்டில் ரூ.59 லட்சம் நகை திருட்டு
/
நிதி நிறுவன அதிகாரி வீட்டில் ரூ.59 லட்சம் நகை திருட்டு
நிதி நிறுவன அதிகாரி வீட்டில் ரூ.59 லட்சம் நகை திருட்டு
நிதி நிறுவன அதிகாரி வீட்டில் ரூ.59 லட்சம் நகை திருட்டு
ADDED : அக் 20, 2025 12:19 AM
திருச்சி: நிதி நிறுவன அதிகாரி வீட்டின் கதவை உடைத்து, 59 லட்சம் ரூபாய் மதிப்பு நகைகளை திருடியவர்களை போலீசார் தேடுகின்றனர்.
திருச்சி, சிம்கோ மீட்டர் பகுதியில் வசிப்பவர் சாமிநாதன், 50; ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவன அதிகாரி.
இவரும், இவரது மனைவியும், சொந்த ஊரான நாகை மாவட்டம், பூவத்தக்குடிக்கு மூன்று நாட்களுக்கு முன் சென்றனர்.
இவரது வீட்டின் மாடியில் குடியிருக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவர், நேற்று முன்தினம் காலையில் பார்த்தபோது, சாமிநாதன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந் தது. இது குறித்து அவருக்கு தகவல் கூறினார்.
சாமிநாதன் வந்து பார்த்த போது, 65 சவரன் நகைகளில், 59 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தன. ஆறு சவரன் நெக்லஸ் மட்டும் அங்கேயே இருந்தது. கே.கே.நகர் போலீசார், திருடர்களை தேடுகின்றனர்.