/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
யாசக பெண்ணை கொன்ற சேலம் கொத்தனார் கைது
/
யாசக பெண்ணை கொன்ற சேலம் கொத்தனார் கைது
ADDED : பிப் 12, 2025 02:06 AM
திருச்சி:யாசகம் பெற்று பிழைப்பு நடத்திய பெண் கொலையான வழக்கில், சேலம் கொத்தனார் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பைபாஸ் சாலை முட்புதரில், 40 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். சமயபுரம் போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், பெண் கொலை செய்யப்பட்ட அன்று, ஆண் ஒருவருடன் சென்றது தெரிந்தது.
விசாரணையில், அவர், சேலம் மாவட்டம், தலைவாசலைச் சேர்ந்த கொத்தனார் விக்னேஷ், 32, என, தெரியவந்தது. திருப்பூரில் விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.
அவர், ஸ்ரீரங்கத்தில் கொத்தனார் வேலை பார்த்தபோது, அங்கு யாசகம் பெற்று பிழைத்துக் கொண்டிருந்த பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண், தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, அதை கலைக்க விக்னேஷிடம், 13,000 ரூபாய் பணம் வாங்கிச் சென்றார்.
சில நாட்கள் கழித்து, அது குறித்து விக்னேஷ் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 2ம் தேதி இரவு, அந்த பெண்ணை, சமயபுரம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்து, விக்னேஷ் தப்பியது விசாரணையில் தெரிந்தது.

