/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
அடுத்தடுத்து மாணவர் தற்கொலை மாதிரி பள்ளி ஹெச்.எம்., மாற்றம்
/
அடுத்தடுத்து மாணவர் தற்கொலை மாதிரி பள்ளி ஹெச்.எம்., மாற்றம்
அடுத்தடுத்து மாணவர் தற்கொலை மாதிரி பள்ளி ஹெச்.எம்., மாற்றம்
அடுத்தடுத்து மாணவர் தற்கொலை மாதிரி பள்ளி ஹெச்.எம்., மாற்றம்
ADDED : ஆக 14, 2025 08:02 PM
திருச்சி:அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை சம்பவத்தால், துவாக்குடி அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர், வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருச்சி, துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில், 56 கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்ட அரசு மாதிரி பள்ளியை, சில மாதங்களுக்கு முன், தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இப்பள்ளியில், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், ஜூனில் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோல், ஜூலையில் வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்தடுத்து மாணவியும், மாணவரும் தற்கொலை செய்ததால், மாதிரி பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த அந்தோணி லுாயிஸ் மத்தியாஸ், அரசங்குடி அரசு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு, தலைமை ஆசிரியராக பணிபுரிந்த அகிலன், மாதிரி பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.