/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மரங்களை வெட்டி விற்ற பள்ளி ஆசிரியர்
/
மரங்களை வெட்டி விற்ற பள்ளி ஆசிரியர்
ADDED : டிச 31, 2024 06:22 AM
திருச்சி : திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி வடக்குகுளம் அருகே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம், 2 ஏக்கர் உள்ளது.
இந்த நிலத்தில் பல வகையான, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்கள் இருந்தன. நேற்று முன்தினம் காலை, அங்கிருந்த மரங்களை சிலர், ஜே.சி.பி., வாயிலாக வேரோடு அகற்றி, துண்டு, துண்டாக வெட்டி லாரியில் ஏற்றிச் சென்றனர்.
மீண்டும் மரங்களை ஏற்ற லாரி வந்தபோது, அப்பகுதி மக்கள் லாரியை பிடித்து, மருங்காபுரி வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விசாரணை நடத்தியதில், அப்பகுதியைச் சேர்ந்த, மணப்பாறை அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவர் தான், மரங்களை விற்று பணம் வாங்கி விட்டதாக தெரிவித்தனர். வருவாய் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஏற்கனவே கடத்திச் சென்ற மரங்கள் எங்குள்ளன என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.