/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சியில் ரூ.30 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
/
திருச்சியில் ரூ.30 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
ADDED : நவ 30, 2024 02:26 AM
திருச்சி,:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் நகரமான ஷார்ஜாவில் இருந்து, திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை, 'ஏர் ஏசியா' விமானத்தில் வந்த பயணியரை, கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக நடந்து கொண்ட ஆண் பயணியை தீவிரமாக சோதித்ததில், அவர் தன் உடைக்குள், 501 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு, 30 லட்சம் ரூபாய். அந்த பயணியை கைது செய்து, கஸ்டம்ஸ் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
போலி பாஸ்போர்ட்டில் வந்த மூவர் கைது: மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை திருச்சி விமான நிலையம் வந்த பயணியரை, குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
சோதனையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாலு, 55, குத்புதீன், 47, ஆகிய இருவரும், போலி ஆவணங்கள் மூலம் எடுத்த பாஸ்போர்ட்டில் வந்தது தெரிந்தது. இருவரும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
அதேபோல, வளைகுடா நாடுகளில் ஒன்றான மஸ்கட்டில் இருந்து வந்த, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நேரு, 55, என்பவரும், போலி ஆவணங்கள் மூலம் எடுத்த பாஸ்போர்ட்டில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டார்.