/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஆசிரியர் நியமிக்க கோரி மாணவர்கள் 'ஸ்டிரைக்'
/
ஆசிரியர் நியமிக்க கோரி மாணவர்கள் 'ஸ்டிரைக்'
ADDED : ஜன 19, 2024 11:30 PM
திருச்சி:திருச்சி மாவட்டம், ஜம்புநாதபுரம் அருகே உள்ள துளையாநத்தம் கிராமத்தில், அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 53 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளியில், தலைமை ஆசிரியர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் இருந்தனர். இதில், ஒரு ஆசிரியர் பணி மாறுதலாகி சென்று விட்டார். தற்சமயம், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளதால், ஒரு ஆசிரியரை பணியமர்த்த வலியுறுத்தி, நேற்று காலை, பள்ளி மாணவ - மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிக்கு வெளியே நின்று, வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம், கல்வித்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி, விரைவில் ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று உறுதியளித்ததால், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, வகுப்புகளுக்கு சென்றனர்.