ADDED : ஆக 26, 2026 03:08 AM
எடமலைப்பட்டி புதுார்: கோவில் பூட்டை உடைத்து, வெள்ளி வேலை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மேலப்பஞ்சப்பூர், சுப்பிரமணியர் கோவிலில், நேற்று காலை, பூஜை செய்வதற்காக, கோவில் பூசாரி வந்தார். அப்போது, கோவில் கதவின் பூட்டு, உடைக்கப்பட்டிருந்தது கண்டு, அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, மூலவர் முருகன் கையில் இருந்த, 500 கிராம் எடையிலான வெள்ளி வேல், உண்டியலில் இருந்த, 40,000 ரூபாய் காணிக்கை, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த, 11 பித்தளைக் குடங்கள், செம்புகள், குத்து விளக்குகள் உட்பட, பூஜைப் பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது.
எடமலைப்பட்டி புதுார் போலீசார், அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள், மூன்று பேர், பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்து, பொருட்களை திருடி சென்றது தெரிந்தது. போலீசார், வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
