/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பள்ளி பஸ்சில் இருந்து தவறி ரோட்டில் விழுந்து தப்பிய சிறுமி
/
பள்ளி பஸ்சில் இருந்து தவறி ரோட்டில் விழுந்து தப்பிய சிறுமி
பள்ளி பஸ்சில் இருந்து தவறி ரோட்டில் விழுந்து தப்பிய சிறுமி
பள்ளி பஸ்சில் இருந்து தவறி ரோட்டில் விழுந்து தப்பிய சிறுமி
ADDED : பிப் 20, 2025 11:57 AM
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் அடுத்த, ஈட்டிவீரம்பாளையம், லட்சுமி கார்டனை சேர்ந்தவர் சிவலிங்கம்; இவரது நான்கு வயது மகள், செங்கப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படித்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்து பள்ளி பஸ்சில் குழந்தைகளுடன் பயணித்துள்ளார். பெருமாநல்லுார் அத்திக்கடவு பிரிவு அருகே, பள்ளி பஸ் வளைவில் வேகமாக திரும்பும் போது, நான்கு வயது சிறுமி பஸ் நுழைவு வாயில் வழியாக வெளியே ரோட்டில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக ரோட்டோரம் வளர்ந்த முட்புதர் மீது சிறுமி விழுந்ததால், முகத்தில் மட்டும் காயம் ஏற்பட்டு, உயிர் தப்பினார். சிவலிங்கம் பெருமாநல்லுார் போலீசில் புகார் அளித்தார். பெருமாநல்லுார் போலீசார் கூறுகையில்,' பள்ளி பஸ் கேட் மூடவில்லை; பஸ்சில் உதவியாளர் இல்லை. பஸ்சை இயக்கிய ஊட்டியை சேர்ந்த டிரைவர், பிரதீப், 28 என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது. பஸ் வேகமாக இயக்கப்பட்டதா என்பது குறித்து 'சிசிடிவி' காட்சி அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

