/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
தொழிலதிபர் வீட்டில் சோதனை லாக்கரை துாக்கியது போலீஸ்
/
தொழிலதிபர் வீட்டில் சோதனை லாக்கரை துாக்கியது போலீஸ்
தொழிலதிபர் வீட்டில் சோதனை லாக்கரை துாக்கியது போலீஸ்
தொழிலதிபர் வீட்டில் சோதனை லாக்கரை துாக்கியது போலீஸ்
ADDED : அக் 19, 2024 03:06 AM
திருச்சி:திருச்சியில் நடந்த ஆபரேஷன் அகழி சோதனையில், தொழிலதிபர் வீட்டின் லாக்கரை கிரேன் மூலம் போலீசார் துாக்கிச் சென்றனர்.
திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார், ஆபரேஷன் அகழி என்ற பெயரில், கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து மூலம் பொதுமக்களிடம் பறித்த சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுவரை, 30 பிரபல ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து பிரமுகர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, 900க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி, அரியமங்கலம் பால்பண்னை பகுதியில் வசிக்கும் மோகன் பட்டேல் என்ற தொழிலதிபர் மீது நிலஅபகரிப்பு புகார்கள், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு வந்துள்ளன. இதையடுத்து கடந்த, 13ம் தேதி அவரது வீட்டை சோதனையிட போலீசார் சென்றனர். ஆனால் வீட்டை பூட்டிக் கொண்டு போலீசாரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து அந்த வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு பெற்று, நேற்று முன்தினம் மதியம் போலீசார் மீண்டும் மோகன் பட்டேல் வீட்டுக்கு சோதனைக்கு சென்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளும் உடன் சென்றனர். அப்போது வீட்டில் இருந்த பெண்கள் அனுமதி மறுக்கவில்லை. இதையடுத்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார், அங்கு சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு ஆவணங்கள் சிக்கின.
வீட்டின் உள்ளே இருந்த லாக்கரின் சாவியை கேட்டபோது, வீட்டில் இருந்தவர்கள் கொடுக்கவில்லை. இதையடுத்து 500 கிலோவுக்கும் மேலே எடை கொண்ட அந்த லாக்கருக்கு சீல் வைத்து, அப்படியே பெயர்த்து, கிரேன் மூலம் போலீஸ் வாகனத்தில் கொண்டு சென்றனர். நீதிபதி முன்னிலையில் அந்த லாக்கர் திறக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவு, 12 மணி வரை சோதனை நடந்தது. சோதனையில் நில அபகரிப்பு தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

