/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஐ.ஏ.எஸ்., அதிகாரி தந்தை வீட்டில் திருட்டு
/
ஐ.ஏ.எஸ்., அதிகாரி தந்தை வீட்டில் திருட்டு
ADDED : அக் 20, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: தமிழக ஜவுளித்துறை இயக்குநரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி லலிதா. இவரது தந்தை ராஜேந்திரன், 70. இவர் திருச்சி, லாவண்யா கார்டன் பகுதியில் வசிக்கிறார். சில நாட்களுக்கு முன், தன் வீட்டை பூட்டி விட்டு, சென்னையில் உள்ள மகள் லலிதா வீட்டுக்கு சென்றார்.
இவரின் உறவினர் நேற்று முன்தினம் இரவு பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, 80,000 ரூபாய், 2 கிலோ வெள்ளி மற்றும் தங்க நகைகள் திருடு போனது தெரிந்தது. தகவலறிந்து வந்த ராஜேந்திரன், போலீசில் புகார் அளித்தார். திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.