/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
துறையூரில் அடாத மழையில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
/
துறையூரில் அடாத மழையில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : ஆக 17, 2011 02:19 AM
துறையூர்: தமிழக முதல்வரும் அ.தி.மு.க., பொதுச்செயலருமான ஜெயலலிதா துறையூர்
தொகுதியில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் கட்சி சார்பில்
நடத்த உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கட்சியினர் கூட்டம் நடந்த ஏற்பாடுகளை
செய்திருந்தனர்.மாலையிலிருந்தே மழை பெய்வதற்கான அறிகுறி இருந்ததால் கூட்டம்
நடக்குமா?, நடக்காதா? என்ற குழப்பம் ஏற்பட்டது. தொகுதி கூட்டம் என்பதால்
தொண்டர்கள் துறையூர், உப்பிலியபுரம், முசிறி ஒன்றிய கிராமங்களிலிருந்து
கூட்டம் நடந்த பாலக்கரை பகுதியில் குவிந்தனர். சென்னை பன்னீர் குழுவினரின்
கலைநிகழ்ச்சி துவங்கியது. கூட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் இரவு ஏழு
மணியிலிருந்து மழை பெய்வதும், விடுவதுமாக இருந்தது. கூட்டம் தொடர்ந்து
நடந்தது. எம்.எல்.ஏ., இந்திராகாந்தி, முன்னாள் அமைச்சர் அண்ணாவி பேசியதும்
தலைமை பேச்சாளர் அரங்கசத்யமூர்த்தி தனது பேச்சில் தி.மு.க.,வை 'ஹை
பிச்சில்' வறுக்கத்தொடங்கிய போது மீண்டும் மழை கொட்டியது. தொடர்ந்து 40
நிமிடம் மழை விடாமல் பெய்தபோதும், பேச்சாளரும் தி.மு.க.,வை திட்ட
தொண்டர்கள் நனைந்து கொண்டே பேச்சை கைதட்டி ரசித்து கேட்டனர். கூட்டத்தில்
நகர, ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர்கள் ஜெயராமன், காமராஜ், செல்வராஜ் உட்பட
பலர் திரளாக பங்கேற்றனர்.