/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
பைக் மீது மோதி கவிழ்ந்த கார் மூன்று பேர் உயிரிழந்த பரிதாபம்
/
பைக் மீது மோதி கவிழ்ந்த கார் மூன்று பேர் உயிரிழந்த பரிதாபம்
பைக் மீது மோதி கவிழ்ந்த கார் மூன்று பேர் உயிரிழந்த பரிதாபம்
பைக் மீது மோதி கவிழ்ந்த கார் மூன்று பேர் உயிரிழந்த பரிதாபம்
ADDED : ஆக 09, 2025 09:20 PM

திருச்சி:பைக் மீது மோதி, கார் கவிழ்ந்து விபத்துக்குள் ளானதில், பைக்கில் சென்றவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த சந்தோஷ், நேற்று வெளிநாடு செல்வதற்காக, திருச்சி விமான நிலையத்துக்கு புறப்பட்டார். நேற்று காலை, அவரை வழியனுப்புவதற்காக, லால்குடி அருகே மாந்துறையை சேர்ந்த கார்த்தி, சாதிக், அப்துல்லா, ஆசிக், அரவிந்த், திலீப் ஆகியோர் 'மஹிந்திரா சைலோ' காரில் புறப்பட்டு சென்றனர்.
லால்குடி நகருக்குள் கார் சென்ற போது, கட்டுப் பாட்டை இழந்த கார், எதிரே வந்த பைக் மீது மோதி கவிழ்ந்தது. பைக்கில் வந்த விஸ்வநாதன், 50, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கார் கவிழ்ந்ததில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அரவிந்த், சாதிக் ஆகியோர் உயிரிழந்தனர். லால்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.