/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
திருச்சி-பாங்காக் விமான சேவை துவக்கம்
/
திருச்சி-பாங்காக் விமான சேவை துவக்கம்
ADDED : செப் 23, 2024 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: தாய் ஏர் வேஸ் மற்றும் ஏர் ஏசியா விமான நிறுவனங்கள், திருச்சியிலிருந்து பாங்காக்கிற்கு விமானங்களை இயக்கத் துவங்கி உள்ளன. அதன்படி, தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 10:35 மணிக்கு, திருச்சிக்கு 46 பயணியருடன் வந்த தாய் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதல் விமானத்துக்கு, திருச்சி விமான நிலையத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரவு, 11:05 மணிக்கு பாங்காக் புறப்பட்ட விமானத்தில் 176 பயணியர் சென்றனர். வாரந்தோறும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் திருச்சி - பாங்காக் விமானங்கள் இயக்கப்படுகின்றன.