/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
விநாயகர் விசர்ஜன ஊர்வலம் : இந்து முன்னணி ஆலோசனை
/
விநாயகர் விசர்ஜன ஊர்வலம் : இந்து முன்னணி ஆலோசனை
ADDED : செப் 01, 2011 01:47 AM
தா.பேட்டை: திருச்சி மாவட்டம் தா.பேட்டையில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா விசர்ஜன ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, நகர செயலாளர் பால்தங்கராஜ் வரவேற்றார்.
மாவட்ட புறநகர் பொறுப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொது செயலாளர் சரவண நடேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நீலமேகம் பங்கேற்று விழா நிகழ்ச்சி குறித்து பேசினார். விநாயகர் சதுர்த்தி விழாவை தா.பேட்டை யூனியனில் சிறப்பாகக் கொண்டாடுவது, நாட்டில் அமைதி நிலவவும், நோய் தாக்குதல்களில் இருந்து பொதுமக்களை காத்திட சிறப்பு ஹோமங்கள், வழிபாடுகள் நடத்துவது, விஜர்சன ஊர்வலத்தின் போது போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர துணை செயலாளர் நிவாஷ், உறுப்பினர்கள் கார்த்திக், தர்மராஜ், பாலாஜி, பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் செந்தில் நன்றி கூறினார்.