/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி
/
டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி
ADDED : செப் 01, 2011 01:48 AM
தா.பேட்டை: தா.பேட்டை அடுத்த தாண்டவம்பட்டி கிராமத்தில் இரண்டு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
தாண்டவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(45).
இவர் தனியார் பஸ்ஸில் டிரைவராக வேலைபார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சுந்தர்ராஜ் தா.பேட்டை கடைவீதியிலிருந்து தனது ஊருக்கு புதியதாக வாங்கிய டி.வி.எஸ்., எக்ஸ் எல் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது, எதிரே ஹோண்டா டூவீலரில் நாமக்கல் மாவட்டம், பழையபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் வந்துள்ளார்.
எதிர்பாராதவிதமாக இரண்டு டூவீலர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுந்தர்ராஜ் பலியானார். விபத்தில் காயமடைந்த சுப்பிரமணியன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தா.பேட்டை எஸ்.ஐ., சியாமளாதேவி விசாரிக்கின்றனர்.