/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
ஓட்டுச்சாவடி அலுவலருக்கான பயற்சி வகுப்பு
/
ஓட்டுச்சாவடி அலுவலருக்கான பயற்சி வகுப்பு
ADDED : செப் 26, 2011 11:52 PM
முசிறி: முசிறியில் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.
பயிற்சி வகுப்பிற்கு, யூனியன் ஆணையர் லதா தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். ஒன்றிய மேலாளர் மருதைதுரை பங்கேற்று உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலகங்களுக்கான பயிற்சி வகுப்பை நடத்தினார். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒன்று மற்றும் இரண்டிற்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடிக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் பொருள்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பில் 300 அலுவலர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.