/
உள்ளூர் செய்திகள்
/
திருச்சி
/
மண்டல கபடி போட்டி மீனாட்சி ராமசாமி கல்லூரி முதலிடம்
/
மண்டல கபடி போட்டி மீனாட்சி ராமசாமி கல்லூரி முதலிடம்
மண்டல கபடி போட்டி மீனாட்சி ராமசாமி கல்லூரி முதலிடம்
மண்டல கபடி போட்டி மீனாட்சி ராமசாமி கல்லூரி முதலிடம்
ADDED : செப் 26, 2011 11:52 PM
மண்ணச்சநல்லூர்: திருச்சி அண்ணா பல்கலை மூன்றாவது மண்டல அணிகளுக்கு இடையேயான கபடி போட்டி சிறுகனூர் அங்காளம்மன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது.
போட்டிகளை கல்லூரி இயக்குனர் ராஜாராமன் தொடங்கி வைத்தார். போட்டிகளில் உடையார்பாளையம் மீனாட்சி ராமசாமி கல்லூரி முதலிடம் பெற்றது. தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி இரண்டாமிடம் பெற்றது. சிறுகனூர் அங்காளம்மன் இன்ஜினியரிங் கல்லூரி வெண்கலப்பதக்கம் வென்றது. பரிசளிப்பு விழாவில் அங்காளம்மன் கல்லூரி தலைவர் சுப்ரமணியம் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில், கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி, மாவட்ட கபடி குழு செயலாளர் அண்ணாதுரை, இந்திய கபடி அணி ஆட்டக்காரர் மாயா என்கிற மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை விகித்தனர். அங்காளம்மன் கல்லூரி உடற்கல்வி துறை இயக்குனர் சுப்ரமணியன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார். முன்னதாக கல்லூரி முதல்வர் கிறிஸ்துராஜ் வரவேற்றார். டீன் சைவராஜ் நன்றி கூறினார்.